கிரைம் செய்திகள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுபாட்டில் விற்ற 13 பேர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் அண்டராயனுார், பணப்பாக்கம், தொட்டிகுடிசை, பெரியசெவலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்ற அண்டராயனுார் குரு, 38; பணப்பாக்கம் முருகன், 47; தொட்டிக்குடிசை சிவகண்டன், 33; அர்ஜூனன், 55; கண்ணாரம்பட்டு கமலக்கண்ணன், 31; முத்தையன், 27;

மதுபாட்டில் விற்ற 13 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் அண்டராயனுார், பணப்பாக்கம், தொட்டிகுடிசை, பெரியசெவலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்ற அண்டராயனுார் குரு, 38; பணப்பாக்கம் முருகன், 47; தொட்டிக்குடிசை சிவகண்டன், 33; அர்ஜூனன், 55; கண்ணாரம்பட்டு கமலக்கண்ணன், 31; முத்தையன், 27; அய்யனார், 42; கீரிமேடு அன்பரசன், 40; கொங்கராயனுார் சசிகுமார், 40; துலுக்கப்பாளையம் ஜானகிராமன், 63; ஆனத்துார் மணிகண்டன், 37; துலங்கம்பட்டு கந்தன், 40; சிறுவானுார் ஏழுமலை, 68; ஆகிய 13 பேரை கைது செய்து இவர்களிடமிருந்து 285 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தொடர் திருட்டு: இருவர் கைது
விழுப்புரம்: செஞ்சி இன்ஸ்பெக்டர் சக்தி, சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார், தீவனுார் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், செஞ்சி மணியம்பட்டு மணிகண்டன், 29; திண்டிவனம் அடுத்த காட்டுசிவிறி அரவிந்தன் என்கிற சுபாஷ், 26; என்பதும், செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கச்சிராயபாளையம்: கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் ஸ்டாலின், 25; இவரது தந்தை தங்கராசு அதே ஊராட்சியில் டேங்க் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று குடிநீர் வினியோகம் செய்யும் மின்மோட்டார் இயங்கவில்லை. அதனை சரி செய்ய ஊராட்சி செயலாளர் ஸ்டாலினை அழைத்துச் சென்றுள்ளார். ஸ்டாலின் குளத்து மேடு அருகே உள்ள மின்கம்பத்தின் மீது ஏறி மின்மோட்டார் ஒயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த பெண் மீட்பு
திருவெண்ணெய்நல்லுார்: மழையம்பட்டு செல்லும் வழியில் சாலையோரம் உள்ள தண்ணீர் இல்லாத திறந்த வெளி கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் பெண் அலறல் சத்தம் கேட்டது.

அவ்வழியே சென்றவர்கள் கிணற்றில் பார்த்தபோது, பெண் உயிருக்கு போராடியது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்தினர் 40 அடி ஆழ கிணற்றில் இருந்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர். விசாரணையில், தடுத்தாட்கொண்டூர் காலனியைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி பிரபாவதி, 35; என்பது தெரியவந்தது. மயங்கிய நிலையில் இருந்த அவரை விழுப்புரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் கிணற்றில் விழுந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மகள் மாயம்: தந்தை புகார்செஞ்சி: கூடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் தனலட்சுமி, 20; வளத்தி அருகே உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 2ம் தேதி மதியம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X