பொது செய்தி

தமிழ்நாடு

பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சோமவார பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை
 பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சோமவார பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், நேற்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பகல் 11:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; காலை 11:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு மேல், சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு விநாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர். உற்சவர் புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X