சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சப் கலெக்டர் அலுவலகம் முன் சிறு வியாபாரிகள் போராட்டம் 

Added : அக் 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகம் முன் வேப்பூர் பஸ் நிலைய சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தி, சப்கலெக்டரிடம் மனு அளித்தனர். வேப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுகிறது. இதன் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகள் அனைத்தையும் காலி செய்ய வேண்டும் என நல்லுார் ஒன்றிய நிர்வாகம் சார்பில், சிறு வியாபாரிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகம் முன் வேப்பூர் பஸ் நிலைய சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தி, சப்கலெக்டரிடம் மனு அளித்தனர். வேப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுகிறது.

இதன் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகள் அனைத்தையும் காலி செய்ய வேண்டும் என நல்லுார் ஒன்றிய நிர்வாகம் சார்பில், சிறு வியாபாரிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று வேப்பூர் சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் சார்பில், விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலர் சுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் முருகையன், அருள்மணி, பாத்திமா பீவி, பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தில், கடைகளை காலி செய்வதற்கு முன்பு மாற்று இடம் வழங்க வேண்டும். பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சப் கலெக்டர் அமித்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X