பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நாளில் விடுப்பு அளிக்காத நிறுவனம் இரு மாவட்டங்களையும் கண்காணிக்க குழு

Added : அக் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் நாளை 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த தினங்களில், அனைவரும் ஓட்டளிக்க தேர்தல் நடைபெறும் பகுதி, மாவட்டங்களில்

விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் நாளை 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த தினங்களில், அனைவரும் ஓட்டளிக்க தேர்தல் நடைபெறும் பகுதி, மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தவறினால் சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை தொழிலாளர் நல ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்தலில் தொழிலாளர்கள் ஓட்டு போடுவதற்கு, ஊதியத்தோடு கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து இக்குழு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு குழு, தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராமு மொபைல் எண்.88256 71449, முத்திரை ஆய்வாளர் வேலுமணி 94871 37960, மேற்பார்வையாளர் பத்மா தொலைபேசி 04146 226324 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கண்காணிப்புக் குழு தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கருணாநிதி, மொபைல் எண்.63808 19227, அரியமுத்து 86109 75299, முத்திரை ஆய்வாளர் சிவக்குமார் 87782 92311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X