பொது செய்தி

தமிழ்நாடு

பரிசு மழையில் நனையும் வாக்காளர்கள் கிராமப்புறங்களில் மக்கள் மகிழ்ச்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டிவனம் : உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வேட்பாளர்கள் தரும் தங்க மூக்குத்தி, மொபைல் போன் உள்ளிட்ட பரிசு மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நாளை 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவர் சில்வர் பாத்திரம் முதல் தங்கம் வரை வாக்காளர்களுக்கு வழங்கி ஓட்டுகளை கவர்ந்து

திண்டிவனம் : உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வேட்பாளர்கள் தரும் தங்க மூக்குத்தி, மொபைல் போன் உள்ளிட்ட பரிசு மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நாளை 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவர் சில்வர் பாத்திரம் முதல் தங்கம் வரை வாக்காளர்களுக்கு வழங்கி ஓட்டுகளை கவர்ந்து வருகின்றனர்.ஒரு சில வேட்பாளர்கள் 5,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிராம் தங்க மூக்குத்தி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன், 1,000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டை, டேபிள் பேன் என பல்வேறு பொருட்களை வழங்குகின்றனர்.இதோடு மட்டுமில்லாமல் ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த ஓட்டுகளை கணக்கிட்டு கணிசமான தொகையை வழங்குவது அல்லது அதற்கு ஈடான பொருட்களை வாங்கித் தருவது என வேட்பாளரின் தகுதிக்கேற்ப இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.இதுமட்டுமின்றி ஓட்டு போடும் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை பணப்பட்டு வாடாவும் பிரதான கட்சிகள் சார்பில் நடந்துள்ளது பொதுத்தேர்தலை விஞ்சும் அளவிற்கு கிராமப்புற வேட்பாளர்கள் பணம் மற்றும் பொருட்களை வாரி வழங்குவதால் கொரோனா காலத்தில் வருவாய் இன்றி தவித்து வந்த கிராமப்புற மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் உற்சாகத்தைத் தந்துள்ளது.மேலும் ஆண் வாக்காளர்களுக்கு மது மற்றும் பிரியாணி கொடுத்து போட்டியிடும் வேட்பாளர்கள் அசத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X