சபாநாயகர் முன் சி.பி.ஐ., ஆஜராக உத்தரவு: கோல்கட்டா உயர் நீதிமன்றம்

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோல்கட்டா-'நாரதா' ஊழல் வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க சபாநாயகர் முன் ஆஜராகும்படி, சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.'நாரதா' என்ற இணைய பத்திரிகை, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் ஊழல்களை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக, சில எம்.எல்.ஏ.,க்கள்

கோல்கட்டா-'நாரதா' ஊழல் வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க சபாநாயகர் முன் ஆஜராகும்படி, சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.'நாரதா' என்ற இணைய பத்திரிகை, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் ஊழல்களை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக, சில எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளன. தன்னிடம் முன் அனுமதி பெறாமல், எம்.எல்.ஏ.,க்களை கைது செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு மேற்கு வங்க சபாநாயகர் பிமன் பானர்ஜி, 'சம்மன்' அனுப்பிஇருந்தார்.


latest tamil news


இதை எதிர்த்து, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கின் விசாரணை நடந்து வருவதால், உரிய விளக்கம் அளிக்க அப்போது அவகாசம் கேட்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
05-அக்-202112:46:02 IST Report Abuse
sankaseshan சபாநாயகர் ஆழம் தெரியாமல் காலை விடறாரு மாட்டிப்பார் CBI பேகத்தின் ஊழலை வெளியில் கொண்டு வந்ததுக்கு தண்டனையா
Rate this:
Cancel
pon - Theni,இந்தியா
05-அக்-202112:29:19 IST Report Abuse
pon MLA வை விசாரிக்க சபாநாயகர் அனுமதி தேவை இல்லை எனில் சிபிஐ உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தானே. அதற்குள் நாம் ஏன் .....?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-அக்-202112:02:32 IST Report Abuse
raja ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன்.... முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை அவர் ஆனாலும் கட்சியாக இருந்த பொழுதெல்லாம் சட்டசபை சபாநாயகர் அனுமதியுடன்தான் விசாரித்து தண்டனை கொடுத்தீர்களா எசமான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X