தமிழ்நாடு

3,297 இடங்களுக்கு நாளை முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7.54 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட தயார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், நாளை 6ம் தேதி முதல் கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடக்கிறது.முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலருக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை 6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், நாளை 6ம் தேதி முதல் கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடக்கிறது.

முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலருக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேரும் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.முதல் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் ஓட்டு போட உள்ளனர்.இத்தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிமற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமையில் ஓட்டுச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளான 296 மற்றும் மிகவும் பதற்றமான 62 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செஞ்சி உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.இதே போன்று, ஓட்டுப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களுக்கு சுற்றுப்பகுதியில் 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10:00 மணி முதல் மூடப்பட்டது.மாவட்டத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்காளர்களைக் கவர்வதில், வேட்பாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X