கிரைம் செய்திகள் - கடலூர்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கம்ப்யூட்டர் சென்டரில் திருட்டு விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலிச்சக்குடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார், 35; ஜங்ஷன் சாலையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ெஷட்டர் திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் வைத்திருந்த ரூ.22 ஆயிரத்தை மர்ம நபர்கள்

கம்ப்யூட்டர் சென்டரில் திருட்டு
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலிச்சக்குடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார், 35; ஜங்ஷன் சாலையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ெஷட்டர் திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் வைத்திருந்த ரூ.22 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.மனைவியை தாக்கியவர் மீது வழக்கு விருத்தாசலம்: மங்கலம்பேட்டை சந்தைபேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 45; மனைவி கோகிலா, 33; இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.எம்.பட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த கோகிலாவை, கடந்த 30ம் தேதி ஜெய்சங்கர் திட்டி தாக்கினார்.

அப்போது, அவர்களது மகனுக்கு காயம் ஏற்பட்டது.புகாரின் பேரில், ஜெய்சங்கர், தாய் பழனியம்மாள் ஆகியோர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.பா.ம.க.,பிரமுகரை மிரட்டியவர் கைது விருத்தாசலம்: விருத்தாசலம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், 38; பா.ம.க., மாவட்ட துணைச் செயலர், இவரை புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல், 37; கடந்த 2ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினார்.

இது குறித்து செந்தில், முருகவேலிடம் கேட்டதற்கு, அவரை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து முருகவேலை கைது செய்தனர். வாலிபர் தற்கொலை சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு கிளாங்காடு காளியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் வாசுதேவன், 22; . ஐ.டி.ஐ., படித்து விட்டு தனியார் காஸ் ஏஜென்சியில் பணி புரிகிறார். பெற்றோர் அவரை திட்டியதால் மனமுடைந்த அவர் நேற்று பகல் 12.00 மணியளவில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.00 மணியளவில் இறந்தார்.

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி, 41; இவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்தார். கடந்த 1ம் தேதி மீண்டும் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.தாலி செயின் பறித்தவர் கைது நெய்வேலி: நெய்வேலி அடுத்த வடக்குத்து அருகே ஸ்கூட்டரில் சென்ற அம்பிகா, 35; என்பவரின் கழுத்திலிருந்த 7 சவரன் தாலி செயினை சில தினங்களுக்கு முன் மர்ம ஆசாமி பறித்துச் சென்றார். டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது , சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், செல்வக்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து தாலிசெயின் பறித்த மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

ஆலந்துார் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின், 21; என்பவரை கைது செய்து 7 சவரன் தாலி செயின் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குவிருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி மனைவி மலர்கொடி, 55, இளையபெருமாள் மகன் தமிழ்சசெல்வன்; இவருக்கும் வீட்டு மனை சம்பந்தமாக பிரச்னை இருந்தது.

கடந்த 29ம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, தமிழ்செல்வன், அவரது மனைவி வெண்ணிலா, மகன் தமிழரசன், தாய் சேதுமணி ஆகியோர் சேர்ந்து மலர்கொடியை திட்டி தாக்கினர். புகாரின் பேரில் தமிழ்செல்வன், அவரது மனைவி வெண்ணிலா உள்ளிட்ட 4 பேர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகள் மாயம்; தாய் புகார்திட்டக்குடி: திட்டக்குடி வதிஷ்டபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகள் திவேகா, 21; பி.எஸ்.சி., படித்துவிட்டு வீட்டில் உள்ளார். கடந்த 3ம் தேதி காய்கறி மார்க்கெட் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X