பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
செஞ்சி : பொன்னங்குப்பம் கிராம மக்கள் தங்கள் ஊராட்சிக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமாக துத்திப்பட்டு கிராமம் உள்ளது. அதிக ஓட்டுக்கள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தினர் ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம் விட்டு தேர்வு செய்வதாக புகார் எழுந்துள்ளது.இந்த முறை

செஞ்சி : பொன்னங்குப்பம் கிராம மக்கள் தங்கள் ஊராட்சிக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமாக துத்திப்பட்டு கிராமம் உள்ளது. அதிக ஓட்டுக்கள் உள்ள துத்திப்பட்டு கிராமத்தினர் ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம் விட்டு தேர்வு செய்வதாக புகார் எழுந்துள்ளது.இந்த முறை தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவி 20 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விட்டுள்ளதாக பொன்னங்குப்பம் பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.எனவே இந்த ஊராட்சியல் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்று தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னாள் ஊராட்சித் தலைவர் பாபு சிங், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் அ.தி.மு.க., தனசேகர், பா.ம.க., சண்முகம் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.இவர்களிடம் செஞ்சி தாசில்தார் ராஜன், டி.எஸ்.பி., இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தி , அடுத்து வரும் தேர்தலில் தனி ஊராட்சியாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தனர்.அதை ஏற்காத பொன்னங்குப்பம் கிராமத்தினர் தொடர்ந்து நேற்று மாலை வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இன்றும், நாளையும் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X