சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு வீடுகளில் திருட்டு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே இரண்டு வீடுகளில் புகுந்து 4 சவரன் நகைகள், ரூ. 50 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறுபாக்கம் அடுத்த கீழ்ஒரத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன், 27. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் துாங்கினார். நேற்று நள்ளிரவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே இரண்டு வீடுகளில் புகுந்து 4 சவரன் நகைகள், ரூ. 50 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறுபாக்கம் அடுத்த கீழ்ஒரத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன், 27.

இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் துாங்கினார். நேற்று நள்ளிரவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 2 சவரன் நகைகள், ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.தொடர்ந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் ஜெயப்பிரியா, 20; இவர் தனது தாயுடன் துாங்கிய போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஜெயப்பிரியா அணிந்திருந்த 2 சவரன் தாலிச்செயினை பறித்தனர். அப்போது, அவர் கூச்சலிட்டதால், மர்ம நபர்கள் தப்பி சென்றனர். சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X