ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

Added : அக் 05, 2021
Share
விழுப்புரம் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கணினி குலுக்கல் முறையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். முகையூர், திருவெண்ணெய்நல்லுார், கண்டமங்கலம், விக்கிரவாண்டி,

விழுப்புரம் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கணினி குலுக்கல் முறையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். முகையூர், திருவெண்ணெய்நல்லுார், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், வானுார் மற்றும் செஞ்சி ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் 13 ஆயிரத்து 74 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஓட்டுப்பதிவு அலுவலர்கள் இன்று 5ம் தேதி காலை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய பயிற்சி மையங்களுக்கு சென்று பணி உத்தரவு நகல்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X