பொது செய்தி

தமிழ்நாடு

 வடலுாரில் காந்தி ஜெயந்தி விழா

Added : அக் 05, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுார் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா, டாக்டர் மகாலிங்கம் 7வது ஆண்டு நினைவு நாள் விழா வள்ளலார் குருகுலம் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. சுத்த சன்மார்க்க நிலைய செயலர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். திருஅருட்பா அகவல் பாராயணம், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.காந்தி மற்றும் மகாலிங்கம் படத்திற்கு மலரஞ்சலி
  வடலுாரில் காந்தி ஜெயந்தி விழா

வடலுார் : வடலுார் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா, டாக்டர் மகாலிங்கம் 7வது ஆண்டு நினைவு நாள் விழா வள்ளலார் குருகுலம் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

சுத்த சன்மார்க்க நிலைய செயலர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். திருஅருட்பா அகவல் பாராயணம், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.காந்தி மற்றும் மகாலிங்கம் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முனைவர் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். தேசிய மனித உரிமை செல் அமைப்பின் சார்பில் தமிழகம் மற்றும் புதுவை அமைப்பின் தலைவர் குமாரகிருஷ்ணன், கடலுார் மாவட்டச் செயலாளர் கண்ணன், சத்திய பிரியா ஆகியோர் செயலர் செல்வராஜூக்கு வாழ்நாள் சாதனையாளர் தேசிய விருது மற்றும் இறைச்செல்வர் பட்டம் வழங்கி கவுரவித்தனர். சப்இன்ஸ்பெக்டர் கமலஹாசனுக்கு மக்கள் காவலர் மாநில விருதும், ரேஷன் கடை பணியாளர் செல்வத்திற்கு மக்கள் சேவகர் மாவட்ட விருதும் வழங்கப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., நந்தகோபால், ராஜாவெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினர். ஓ.பி.ஆர் கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் அறிமுக உரையாற்றி விழாவை ஒருங்கிணைத்தார். மாவட்ட மனித உரிமை செல் செயலர் கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X