லாஸ்பேட்டை பாரில் ரகளை தந்தை, மகன் கைது

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு மதுபானம் கேட்டு ரகளை செய்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த தாஜிதீன், 49; அவரது மகன் இந்தியாஸ், 24; இருவரும், மதுபானம் குடித்தனர். இரவு 10:00 மணிக்கு கடை மூடப்பட்டது.அப்போது, தங்களுக்கு மதுபானம் வேண்டும் என

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு மதுபானம் கேட்டு ரகளை செய்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள தனியார் மதுபான பாரில் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த தாஜிதீன், 49; அவரது மகன் இந்தியாஸ், 24; இருவரும், மதுபானம் குடித்தனர். இரவு 10:00 மணிக்கு கடை மூடப்பட்டது.அப்போது, தங்களுக்கு மதுபானம் வேண்டும் என கேட்டனர். மதுபான பார் மூடப்பட்டு விட்டதால் வழங்க இயலாது என ஊழியர் கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த தந்தையும் மகனும், பார் ஊழியர் கண்ணனை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தனர்.கடை உரிமையாளர் சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில் இருவர் மீதும் 4 பிரிவு களில் வழக்கு பதிந்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X