பொது செய்தி

இந்தியா

விடுதலை நாள் விழா: கலெக்டர் ஆலோசனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாள் விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரி விடுதலை நாள் விழா, நவ.,1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி, விடுதலை நாள் விழாவை கடற்கரை

காரைக்கால் : காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாள் விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி விடுதலை நாள் விழா, நவ.,1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி, விடுதலை நாள் விழாவை கடற்கரை சாலையில் அமைந்துள்ள சீகல்ஸ் உணவகம் எதிரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.துணை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், ரகுநாயகம், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி தாயாளன், நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார், கலெக்டரின் செயலர் புஷ்பநாதன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X