இந்தியா

சிக்னலில் யாசகம் கேட்போர் அதிகரிப்பு அரசு மறுவாழ்வு அளிக்க முன்வருமா?

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களில் யாசகம் கேட்போர் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அவலமும் உள்ளது. இதற்கு, அரசு மாற்று ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.புதுச்சேரியில் இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்திரா சிக்னலில் 4 சாலைகளும், ராஜிவ் சிக்னலில் 5 சாலைகள் சந்திக்கின்றன. இவ்விரு


புதுச்சேரி : இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களில் யாசகம் கேட்போர் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அவலமும் உள்ளது.

இதற்கு, அரசு மாற்று ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.புதுச்சேரியில் இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்திரா சிக்னலில் 4 சாலைகளும், ராஜிவ் சிக்னலில் 5 சாலைகள் சந்திக்கின்றன. இவ்விரு சிக்னலிலும், வாகனங்கள் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கின்றன. அப்போது, முதியோர், பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோர், சிக்னலில் காத்திருக்கும் ஒவ் வொரு வாகன ஓட்டிகளிடம் சென்று யாசகம் கேட்கின்றனர். பார்வையற்றவர் கையை பிடித்து வரும் நபர் திடகாத்திரமாக இருக்கிறார்.தினசரி புதுப்புது ஆட்கள் பார்வையற்றவர் கையை பிடித்துக் கொண்டு யாசகம் கேட்கிறார். அவர்கள் யார், புதுச்சேரியை சேர்ந்தவர்களா. பல வாகன ஓட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பண உதவி செய்கின்றனர். அவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ.700 வரை யாசகம் பெறுகின்றனர்.சில நேரங்களில் சிக்ன லில் விபத்துக்களும் நடக் கிறது. காத்திருக்கும் வாகன ஓட்டிகள், சிக்னல் விழுந்ததும் வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.

அப்போது, யாசகம் கேட்டு வாகனங்களின் நடுவில் சிக்கி நிற்கும் பார்வையற்ற மற்றும் ஊனமுற்றவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சாலையோரம் ஓடுகின்றனர்.அதனால், மாற்றுத்திறனாளிகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள், வாகன ஓட்டிகள் இருவருமே விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். சிக்னலில் விபத்து நேராமல் பார்த்துக் கொள்வது போக்குவரத்து போலீசாரின் கடமை.மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் சமூக நலத்துறை, போக்குவரத்து சிக்னல்களில், தினந்தோறும் ஆபத்தான முறையில் யாசகம் கேட்கும் மாற்றுத்திறனாளிகள் புதுச்சேரியை சேர்ந்தவர்களா என்பதை ஆய்வு செய்து, அவர்களை மீட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாபாரத்தால் விபரீதம்
ராஜிவ், இந்திரா ஆகிய இரு சிக்னல்களிலும் வடமாநிலத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும், கார் கண்ணாடியை சுத்தம் செய்யும் சிறிய பிளாஸ்டிக் பொருள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பென்சில், ஏர் பில்லோ போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.சிக்னல் விழுந்ததும் வாகனங்கள் புறப்பட தயாராகும்போது, அங்கு வியாபாரம் செய்யும் வடமாநில தொழிலாளர்களும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சிக்னலில் வியாபாரம் செய்வதை, போலீசார் தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X