பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதிய திட்ட சந்தா பிடிக்க கிராம உதவியாளர் சங்கம் முறையீடு

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரை : 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சந்தா பிடித்தம் செய்ய வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்க தலைவர் சாக்ரடீஸ், செயலாளர் மணிகண்டன், பெருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் அமைச்சர் ராமச்சந்திரனிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: நிதித்துறை உத்தரவின்படி சிறப்பு காலமுறை

மதுரை : 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சந்தா பிடித்தம் செய்ய வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்க தலைவர் சாக்ரடீஸ், செயலாளர் மணிகண்டன், பெருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் அமைச்சர் ராமச்சந்திரனிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: நிதித்துறை உத்தரவின்படி சிறப்பு காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்ட சந்தா பிடித்தம் செய்வதை நிறுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை காட்டி கிராம உதவியாளர்களுக்கும் சந்தா பிடித்தம் செய்வதை கைவிட அரசு நடவடிக்கை எடுக்கிறது. அந்த முடிவை கைவிட வேண்டும். வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதுடன், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X