இந்தியா

தீபாவளி சிறப்பங்காடிக்கான பூர்வாங்க பணிகள் துவக்கம் மூன்றாண்டுகளுக்கு பிறகு பாப்ஸ்கோ தீவிரம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மூன்றாண்டுகளுக்கு பிறகு தீபாவளி சிறப்பங்காடியை மீண்டும் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை 'பாப்ஸ்கோ' நிறுவனம் துவங்கியுள்ளது.புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான, 'பாப்ஸ்கோ', கடந்த 2003ம் ஆண்டு முதல், பண்டிகை காலங்களில் சிறப்பு அங்காடிகளை அமைத்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பண்டிகை கால பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்து

புதுச்சேரி : மூன்றாண்டுகளுக்கு பிறகு தீபாவளி சிறப்பங்காடியை மீண்டும் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை 'பாப்ஸ்கோ' நிறுவனம் துவங்கியுள்ளது.புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான, 'பாப்ஸ்கோ', கடந்த 2003ம் ஆண்டு முதல், பண்டிகை காலங்களில் சிறப்பு அங்காடிகளை அமைத்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பண்டிகை கால பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

இந்த அங்காடிகளில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதில், தீபாவளி பண்டிகை சிறப்பங்காடிக்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருக்கும் பாப்ஸ்கோ நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு முதல் தீபாவளி சிறப்பங்காடி நடத்தவில்லை.ஏற்கனவே இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி, மீண்டும் தீபாவளி சிறப்பங்காடி நடத்தப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.முதல்வரின் அறிவிப் புக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான பணிகளை பாப்ஸ்கோ துவக்கி உள்ளது. வரும் நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.அதையொட்டி, மூன்றாண்டுகளுக்கு பிறகு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாப்ஸ்கோ நிறுவனம் சிறப்பு அங்காடி திறக்க உள்ளது.

இதற்காக 3.15 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. அதையடுத்து, சிறப்பங்காடிக் கான பூர்வாங்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு தட்டாஞ்சாவடி வேளாண் வளாகம், காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம், பாகூர், திருக்கனுார், மதகடிப்பட்டு, மடுகரை, வில்லியனுார், ஏம்பலம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தீபாவளி சிறப்பு அங்காடிகள் அமைக்கப்பட்டன.இந்தாண்டு, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் தொகுதியில் தீபாவளி சிறப்பங்காடியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், நிதி பிரச்னை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு இடங்களில் மட்டும் தீபாவளி சிறப்பங்காடிகளை நடத்த பாப்ஸ்கோ ஆலோசித்து வருகிறது.சிறப்பங்காடியில், அத்தியாவசிய பொருட்களான மளிகை, சமையல் எண்ணெய், மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.மேலும், 65 வகையான பட்டாசுகள் மலிவான விலையில் விற்கவும் திட்டமிட்டு, டெண்டர் பணிகளை பாப்ஸ்கோ நிறுவனம் துவக்கியுள்ளது. சிறப்பங்காடியில் 5 கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசுகள் விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக மளிகை பொருட்கள் விலை ஏறுமுகமாக உள்ளது. பண்டிகை காலத்தில் மேலும் விலை உயரும் சூழல் உள்ளது.இந்நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால், சிறப்பங்காடி மக்களுக்கு உதவிகரமாக அமையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X