பொது செய்தி

தமிழ்நாடு

குறை தீர்க்கும் முகாமில் மனு கொடுக்க குவிந்த கூட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரை : கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து 19 மாதங்களுக்கு பிறகு மதுரையில் நேற்று நடந்த குறை தீர் முகாமில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனுக்களை வழங்கினர்.இதற்காக காலை 9:00 மணி முதல் மனுதாரர்கள் அலுவலகத்தில் குவியத்துவங்கினர். சமூகநலத்துறை ஊழியர்கள் 770 மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு

மதுரை : கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து 19 மாதங்களுக்கு பிறகு மதுரையில் நேற்று நடந்த குறை தீர் முகாமில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனுக்களை வழங்கினர்.

இதற்காக காலை 9:00 மணி முதல் மனுதாரர்கள் அலுவலகத்தில் குவியத்துவங்கினர். சமூகநலத்துறை ஊழியர்கள் 770 மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு
* தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம், ஜனநாயக மனித உரிமைகள் கழகம் சார்பில் மாடுபிடி வீரர் மணி தலைமையில் நிர்வாகிகள், 2022ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு அரசு காப்பீடு வசதி செய்து தர வேண்டும். ஜல்லிக்கட்டை மாணவர்கள் அறிய பாடபுத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும். மதுரை தமுக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட நினைவு துாண் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

மட்டமான ரேஷன் அரிசி
* சமூக ஆர்வலர் ஜெகநேசன் திருநகர் 2வது பஸ் ஸ்டாப் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட மட்ட ரகமான இலவச அரிசியுடன் கலெக்டரிடம் புகார் செய்தார். அவர் கூறுகையில், ''மாவட்டத்தில் பல கடைகளில் சாப்பிட முடியாத அளவுக்கு மோசமான அரிசி வழங்கப்பட்டுள்ளது. அதை திரும்ப பெற்று தரமான அரிசி வழங்க வேண்டும்,'' என்றார்.

ஊராட்சியில் பாகுபாடு

* மதுரை கிழக்கு ஒன்றியம் மாத்துார் ஊராட்சி ஆதிதிராவிட பொதுமக்கள் அளித்த மனுவில், 'ஊராட்சியில் பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் கிராம சபை கூட்டத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக நடத்தவில்லை. தட்டி கேட்டால் மிரட்டுகின்றனர்,' என்றனர்.பாதுகாப்பில் கோட்டைபேரையூர் சுப்பலாபுரம் இரு கைகளையும் இழந்த ராம்குமார் 24 ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக மேல் தளத்திற்கு சென்று தன்னை ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டினார். 20 நிமிடங்கள் அவருடன் பேசி கவனத்தை திசை திருப்பி போலீசார் மீட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில்களில் இருந்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி அவர் மேல்தளத்திற்கு சென்றது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X