பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆலோசனை கூட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டியில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.வட்ட செயலாளர் மகாராஜா தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஓம் சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம்

திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டியில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வட்ட செயலாளர் மகாராஜா தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஓம் சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் பிரசாரத்தில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூறினார். தற்போது அவரால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.

அந்த ரகசியம் என்ன என்பதும் புரியவில்லை. அ.தி.மு.க., மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மதுரைக்கு தேவையான நிதியை பெற்று ஸ்மார்ட் சிட்டி, அம்ரூட் திட்டங்களை கொண்டு வந்தது. தி.மு.க., அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு இழப்பு என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X