வருமான வரி பிடித்தம் படிவம் தாக்கல் செய்யாவிடில் அபராதம்; இணை கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருமான வரி பிடித்தம் படிவம் தாக்கல் செய்யாவிடில் அபராதம்; இணை கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை

Added : அக் 05, 2021
Share
மதுரை : ''வருமான வரி பிடித்தம் படிவங்களை தாக்கல் செய்யாத பட்சம் அபராதம் விதிக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் வருமான வரி இணை கமிஷனர் கார்த்திகேயன் பேசினார்.உதவி கமிஷனர் புஷ்பராஜ் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினர். இணை கமிஷனர் கார்த்திகேயன் பேசியதாவது: வருமான வரி பிடித்தம்

மதுரை : ''வருமான வரி பிடித்தம் படிவங்களை தாக்கல் செய்யாத பட்சம் அபராதம் விதிக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் வருமான வரி இணை கமிஷனர் கார்த்திகேயன் பேசினார்.

உதவி கமிஷனர் புஷ்பராஜ் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினர். இணை கமிஷனர் கார்த்திகேயன் பேசியதாவது: வருமான வரி பிடித்தம் படிவங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாததால் அரசு கணக்கில் வரி வரவு வைப்பது போன்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன.

சில படிவங்களில் பான் எண் உள்ளிட்டவை தவறாக குறிப்பிடப்படுவதால் ஏற்று கொள்ள முடியாத நிலையுள்ளது.வருமான வரி பிடித்தம் படிவம் தாக்கல் செய்யாவிட்டால் வருமான வரி சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றார்.வருமான வரி அதிகாரி கருணாநிதி நன்றி கூறினார். கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X