ரயில்வே மேம்பாலத்தில் மெகா பள்ளம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நுாறடி ரோடு ரயில்வே மேம்பாலத்தில், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மெகா பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டி களை அச்சுறுத்தி வருகிறது.புதுச்சேரி நுாறடி சாலையில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், கடந்த ஓராண்டாக அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.பாலத்தில் சிமென்ட் கலவை பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே
 ரயில்வே மேம்பாலத்தில்  மெகா பள்ளம்

புதுச்சேரி : நுாறடி ரோடு ரயில்வே மேம்பாலத்தில், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மெகா பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டி களை அச்சுறுத்தி வருகிறது.
புதுச்சேரி நுாறடி சாலையில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், கடந்த ஓராண்டாக அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.பாலத்தில் சிமென்ட் கலவை பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் 'பேட்ச் ஒர்க்' செய்வதும் வாடிக்கையாகி விட்டது.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பாலத்தில் ஏற்பட்ட பள்ளம், சீரமைக்கப்பட்டது. இப்போது மீண்டும் அதே இடத்தில் சிமெண்ட் கலவை காணாமல்போய், இரும்பு கம்பிகள் ஆபத்தான வகையில் வெளியே தெரிகின்றன.பள்ளம் இருப்பது தெரியாமல், பாலத்தை கடக்கும் பைக் ஓட்டிகள் அதில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.ஒப்புக்கு 'பேட்ச் ஒர்க்' செய்யாமல், தரமாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X