தமிழ்நாடு

ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில் விதிமீறல்! கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும் புகார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரை: மதுரையில் நடந்த ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில், விதிமுறைகளை பின்பற்றாமல், கள்ள ஓட்டுக்கள் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இச்சொசைட்டியில் 1300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடக்கும். பல ஆண்டுகளாக ஒரிரு நிர்வாகிகள் மட்டும் தொடர்ந்து பதவியில் நீடித்து
ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில் விதிமீறல்! கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும் புகார்

மதுரை: மதுரையில் நடந்த ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில், விதிமுறைகளை பின்பற்றாமல், கள்ள ஓட்டுக்கள் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


இச்சொசைட்டியில் 1300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடக்கும். பல ஆண்டுகளாக ஒரிரு நிர்வாகிகள் மட்டும் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தனர். செப்., 29 அண்ணாநகர் தனியார் திருமண மண்டபத்தில் பொது குழு நடந்தது. அதில் விதிமுறைகளை பின்பற்றாமல் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து ரெட்கிராஸ் ஆயுள்கால உறுப்பினர் மூகாம்பிகை கலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: செப்.,29 நடந்த தேர்தலுக்கு முன் தேர்தல் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட எந்த விதிகளும் பின்பற்றாமல் பொது குழுவில் அதிகபட்சம் 200 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் கை துாக்கி ஓட்டெடுப்பு நடத்தி தேர்தல் நடத்தப்பட்டது.

ஓட்டெடுப்புக்கு முன் 'டி.என்.58 ஏ.எஸ். 3049' என்ற வேனில் வந்த பலர் அடையாள அட்டை இன்றி கூட்டத்தில் பங்கேற்று கை துாக்கி ஓட்டு போட்டு சென்றனர். அதை கள்ள ஓட்டுக்களாக கருதி, விதிமீறி நடந்த இத்தேர்தலை ரத்து செய்து மீண்டும் நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X