பொது செய்தி

தமிழ்நாடு

10 ம் வகுப்பு தேர்ச்சி; சான்றிதழ் வழங்கல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.கொரோனாவால் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு முந்தைய வகுப்பு பொதுத்தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி தேர்ச்சி சான்றிதழ்
 10 ம் வகுப்பு தேர்ச்சி; சான்றிதழ் வழங்கல்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொரோனாவால் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு முந்தைய வகுப்பு பொதுத்தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தனர்.மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 317 பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரம் பேர் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

நேற்று (அக்.4) பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என்ற குறிப்புடன் அசல் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் வந்து சான்றிதழை பெற்றனர். அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வழியாக மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவும் மேற்கொள்ள அக்.18 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X