வைகை ஆற்றங்கரையில் குடிநீர் தட்டுப்பாடு வடிகால் வசதியின்றி கழிவு நீர் தேக்கம் ; குன்னூர் ஊராட்சியின் அவலம்| Dinamalar

வைகை ஆற்றங்கரையில் குடிநீர் தட்டுப்பாடு வடிகால் வசதியின்றி கழிவு நீர் தேக்கம் ; குன்னூர் ஊராட்சியின் அவலம்

Added : அக் 05, 2021
Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், குன்னுார் ஊராட்சியில் அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சியில் வருவாய் வாய்ப்பு இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் குன்னுார், அரப்படித்தேவன்பட்டி கிராமங்களில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். வைகை அணை மற்றும் ஆற்றின் கரையை ஒட்டி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், குன்னுார் ஊராட்சியில் அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சியில் வருவாய் வாய்ப்பு இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சியில் குன்னுார், அரப்படித்தேவன்பட்டி கிராமங்களில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். வைகை அணை மற்றும் ஆற்றின் கரையை ஒட்டி உள்ள இக்கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக உள்ளது. கிராமங்களில் கழிவுநீர் தேக்கம், தெருக்கள், குறுக்கு சந்துகளில் சுகாதாரமற்ற நிலை உள்ளது.

கால்நடை கழிவுகள், துார்வாரப்படாத பெரிய வடிகால் இவற்றால் கொசுக்கள் பெருக்கம் அதிகம் உள்ளது. வைகை ஆற்றின் கரையில் இருந்தும் அரப்படித்தேவன்பட்டியில் மேல்நிலைத்தொட்டி, குழாய் வசதி போதுமான அளவில் இல்லாததால் குடிநீருக்கு அல்லாடுகின்றனர்.பொதுமக்கள் கருத்து:

வைகை ஆறு அருகே குடிநீர் தட்டுப்பாடு

ஜெ.யோவான், விவசாயி, அரப்படித்தேவன்பட்டி: கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள 3 தெருக்களில் குடிநீர் சரியாக வருவதில்லை. மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் மேடான பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வைகை ஆறு அருகில் இருந்தும் குடிநீருக்கு சிரமப்படுகிறோம். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை இல்லை. வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு மட்டும் உள்ளது. பொதுக்குழாய் இல்லை. ரோட்டின் ஓர மழைநீர் வடிகால் துார்வாராததால் பல மாதங்களாவதால் கழிவுகள் தேங்கியுள்ளன.

சுகாதார வளாகம் தேவை

டி.மணி, அரப்படித் தேவன் பட்டி: கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் மழை, வெயிலால் பாதிக்கப்படுகின்றனர். பொதுக்கழிப்பறை வசதி கேட்டும் இதுவரை செய்து தரவில்லை. திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். சுடுகாடு, கல்லறை தோட்டங்களில் அமரும் இடம், தண்ணீர் வசதி இன்றி சிரமப்பட வேண்டி உள்ளது. சுகாதார வளாகம், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

சேதமான சிமென்ட் ரோடு

ஜெ.புஷ்பம், அரப்படித்தேவன்பட்டி: இக்கிராமத்தில் 8 தெருக்கள், குறுக்கு சந்துகள் உள்ளன. பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட்ரோடு சேதம் அடைந்துஉள்ளது. மழை பெய்தால் தெருவில், சந்தில் நடக்க முடியாது. கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி சேதம் அடைந்துஉள்ளது. இப்பகுதயில் இருந்து வரும் கழிவுநீர் மேல்நிலைத்தொட்டி அடியில் தேங்கி குடிநீருடன் கலந்து பாதிப்பு ஏற்படுகிறது. மேல்நிலைத்தொட்டிக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும்.

தொகுதி வளர்ச்சி நிதிவேண்டும்

எம்.சரஸ்வதி ஊராட்சி தலைவர், குன்னுார்: ஊராட்சியில் வருவாயாக வீட்டு வரி, தொழில் வரி மட்டுமே உள்ளது. இதில் பராமரிப்பு பணிகூட செய்ய முடியவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கான சிறப்பு நிதிக்கும் வாய்ப்பில்லை. கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய பணிகளை, கடன் வாங்கித்தான் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஊராட்சி செயலாளர் குன்னுார் கூடுதலாக கவனிப்பதால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இங்கு தனி செயலாளர் நியமிக்க எடுக்க வேண்டும்.

ரோட்டை ஒட்டி உள்ள மழைநீர் வடிகால் சுத்தம் செய்வதற்கோ, பராமரிக்கவோ தேசிய நெடுஞ்சாலை அனுமதிக்கவில்லை. இதனால் சுகாதார பாதிப்ப ஏற்படுகிறது. கிராமத்தின் ஒட்டு மொத்த கழிவுநீர் மழைநீர் இந்த வடிகால் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதனை பராமரிக்க முடியாததால் சுகாதார பாதிப்பு அதிகமாகிறது. வருவாய் இல்லாத ஊராட்சிக்கு எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X