பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி முதலாண்டுக்கு நேரடி வகுப்பு துவக்கம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கலை, அறிவியல் கல்லுாரிகளில் முதலாண்டு மாணவருக்கு நேற்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கின.கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருவதால் செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், கல்லுாரியில் 2, 3ம் ஆண்டு மாணவருக்கும் நேரடி வகுப்புகள் துவங்கியது.நேற்று (அக்.4) கல்லுாரிகளில் முதலாண்டு மாணவருக்கும் நேரடி வகுப்புகள் துவங்கியது. கடந்த

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கலை, அறிவியல் கல்லுாரிகளில் முதலாண்டு மாணவருக்கு நேற்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கின.

கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருவதால் செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், கல்லுாரியில் 2, 3ம் ஆண்டு மாணவருக்கும் நேரடி வகுப்புகள் துவங்கியது.நேற்று (அக்.4) கல்லுாரிகளில் முதலாண்டு மாணவருக்கும் நேரடி வகுப்புகள் துவங்கியது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பை ஆன்லைனில் பயின்ற மாணவர்கள், நேற்று கல்லுாரிக்கு ஆர்வமுடன் வந்தனர்.

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர், ஜி.டி.என்., மற்றும் பார்வதீஸ் கல்லுாரி உட்பட மாவட்டம் முழுவதும் 10 க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டு வகுப்பு துவங்கியது. மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்து, சானிடைசர் வழங்கினர்.மாணவர்களுக்கு பூ கொடுத்து பேராசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய விபரம் சேகரிக்கப்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், காந்தி கிராம பல்கலையில் மட்டும் வகுப்புகள் துவங்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X