பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சளாறு அணையில் உபரிநீர் வெளியேற்றம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் அணை பாதுகாப்பு கருதி இரண்டு கண் மதகு வழியாக உபரிநீர் வினாடிக்கு 90 கனஅடி வெளியேற்றப்பட்டது.இந்த அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். அணையில் 55 அடி மட்டும் நீர் தேக்க முடியும். இரு தினங்களாக

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் அணை பாதுகாப்பு கருதி இரண்டு கண் மதகு வழியாக உபரிநீர் வினாடிக்கு 90 கனஅடி வெளியேற்றப்பட்டது.

இந்த அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். அணையில் 55 அடி மட்டும் நீர் தேக்க முடியும். இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் இரவு நீர் வரத்து வினாடிக்கு 90 கனஅடி வந்தது. இதனை 2 கண் மதகு வழியாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

மழையளவு 4 மி.மீ.,எச்சரிக்கை

தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, சிவஞானபுரம் வழியாக மஞ்சளாற்றில் தண்ணீர் செல்கிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணை நீரால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X