சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வில்பட்டியில் விதிமீறி வளர்ச்சிப் பணி; இயந்திரங்கள் பறிமுதல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி இடைத்தேர்தலில் விதிமீறி வளர்ச்சிப் பணி செய்த இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வில்பட்டி ஊராட்சி திருவள்ளுவர் நகரில் மாரியம்மன் கோயிலைச் சுற்றி ரூ. 5 லட்சம் மதிப்பில் தரைத்தளம் அமைக்க மண் அள்ளும் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது. மேலும் கான்கிரீட் அமைப்பதற்கான பிரத்யேக பணிகள் துவங்கின. தேர்தல் நடக்கும்

கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி இடைத்தேர்தலில் விதிமீறி வளர்ச்சிப் பணி செய்த இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வில்பட்டி ஊராட்சி திருவள்ளுவர் நகரில் மாரியம்மன் கோயிலைச் சுற்றி ரூ. 5 லட்சம் மதிப்பில் தரைத்தளம் அமைக்க மண் அள்ளும் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது. மேலும் கான்கிரீட் அமைப்பதற்கான பிரத்யேக பணிகள் துவங்கின. தேர்தல் நடக்கும் சூழலில் ஆளும் கட்சியினர் ஓட்டுகளை கவர இவ்வாறு பணி செய்வதாக கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இவ்வூராட்சியின் உப்புப் பாறை மெத்தில் வீட்டு மனை பட்டா, புதிய குடிநீர் இணைப்புகள், தெருவிளக்கு அமைத்தல் போன்ற வளர்ச்சிப் பணிகள் முன்னறிவிப்பின்றி ஜரூராக செய்யப்பட்டன. இதற்கு மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இப்பணி செய்யாத ஊராட்சி, தற்போது செய்வது குறித்து கேள்வி எழுப்பினர். ஒன்றிய அதிகாரிகள் பணிகளை தடுத்து நிறுத்தி, மண் அள்ளும் இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

வேட்பாளர்கள் கூறுகையில்: ஆளும் கட்சியினர் வாக்காளர்களை கவர இது போன்ற பணிகளை தேர்தல் விதிமீறி செய்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நடக்கிறது. தேர்தல் நியாயமான முறையில் நடக்க வேண்டும், எனக் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X