தமிழ்நாடு

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 14 இலக்க எண்; உணவு பொருள் வழங்கும் ரசீதில்

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பொருட்கள் வழங்குவோர் அதன் ரசீதில் 'எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண்' அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு பாதுகாப்பான, தரமான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவு பாதுகாப்புத்துறை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 14 இலக்க உரிமம் எண் வழங்குகிறது.இந்த எண்ணை உணவு பொருட்கள் வழங்கும் பாக்கெட், அட்டை பெட்டியின் வெளிப்புறத்தில்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பொருட்கள் வழங்குவோர் அதன் ரசீதில் 'எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண்' அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான, தரமான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவு பாதுகாப்புத்துறை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 14 இலக்க உரிமம் எண் வழங்குகிறது.இந்த எண்ணை உணவு பொருட்கள் வழங்கும் பாக்கெட், அட்டை பெட்டியின் வெளிப்புறத்தில் அச்சிட வேண்டும். சிலர் உரிமம் இன்றி உணவு பொருட்கள் விற்பனை செய்வதால் நுகர்வோர் புகார் செய்ய முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, அக்.1 முதல் உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரும் தங்கள் பொருளுக்கான ரசீதில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் எண்ணை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உணவு வணிர்கள் 19 ஆயிரத்து 203 பேர் பதிவுச் சான்று, 3 ஆயிரத்து 787 பேர் உரிமம் பெற்றுள்ளனர். இதுவரை உரிமம் பெறாதவர்கள் அதனைப் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் புதுப்பிக்காமல் இருந்தால் அதனை உடனே புதுப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், ரசீதில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண்ணை குறிப்பிடாமல் இருந்தால் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறுகையில், ''நுகர்வோர் எந்த உணவு பொருளை வாங்கினாலும் ரசீதை கேட்டு வாங்க வேண்டும். அப்போது தான் உணவின் தரம் குறித்து புகார் அளிக்க ரசீதில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ, எண் உதவியாக இருக்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X