பொது செய்தி

தமிழ்நாடு

கணவரை கைது செய்யக் கோரி திட்டக்குடியில் மனைவி தர்ணா

Added : அக் 05, 2021
Share
Advertisement
திட்டக்குடி : கணவரை கைது செய்யக் கோரி மனைவி டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை,42. இவரது மனைவி பாரதி,34; இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. ஒரு மகள் உள்ளார். தங்கதுரை வெளிநாட்டில் பணி புரிந்த போது மனைவியின் நகையை அடகு வைத்து வீடு கட்டச்

திட்டக்குடி : கணவரை கைது செய்யக் கோரி மனைவி டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை,42. இவரது மனைவி பாரதி,34; இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. ஒரு மகள் உள்ளார். தங்கதுரை வெளிநாட்டில் பணி புரிந்த போது மனைவியின் நகையை அடகு வைத்து வீடு கட்டச் சொன்னார். கடந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து தங்கதுரை சொந்த ஊருக்கு திரும்பினார். நகையை மீட்டுத் தர கேட்டதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நகை பிரச்னையால் கடந்த 26ம் தேதி கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பாரதியை தங்கதுரை அடித்து துன்புறுத்தினார்.இது குறித்து பாரதி அளித்த புகாரை ராமநத்தம் போலீசார் வாங்க மறுத்தனர். இதையடுத்து பாரதி போனில் எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார். எஸ்.பி.,சக்திகணேசன் உத்தரவின் பேரில் ராமநத்தம் போலீசார் செப்., 27ம் தேதி வழக்குப் பதிந்தனர். நேற்று காலை 10 மணிக்கு திட்டக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு பாரதி, அவரது தாய் வசந்தாவுடன் வந்தார். ராமநத்தம் போலீசார் தன்னை மிரட்டுவதாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி டி.எஸ்.பி., அலுவலகம் முன் தர்ணா நடத்தினர். தகவலறிந்த டி.எஸ்.பி.,சிவா, பாரதியை ராமநத்தம் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X