பெயர்ந்து விழும் கூரையுடன் அரசு தொடக்கப்பள்ளி

Added : அக் 05, 2021
Share
Advertisement
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இந்தப் பள்ளிக்கு என்று இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. அதில் ஒன்று 1968 ல் கட்டியது. இந்த பழைய கட்டடத்தின் கூரை சேதமடைந்து மழை நேரத்தில் ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுகிறது.மழை நீர் வகுப்பறை முழுவதும் நிரம்பி விடுவதால், வகுப்பறையை மாணவர்கள் பயன்படுத்த

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளிக்கு என்று இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. அதில் ஒன்று 1968 ல் கட்டியது. இந்த பழைய கட்டடத்தின் கூரை சேதமடைந்து மழை நேரத்தில் ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுகிறது.மழை நீர் வகுப்பறை முழுவதும் நிரம்பி விடுவதால், வகுப்பறையை மாணவர்கள் பயன்படுத்த முடிவதில்லை. அந்நேரத்தில் அருகிலுள்ள கிராம சேவை மையத்தில் வகுப்பை நடத்தும் அவலம் உள்ளது.

பள்ளிக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளதெனவும் கூறினர்.அந்தப் பகுதி சமூக ஆர்வலர் நிர்மல் விஜய் கூறுகையில், 'பள்ளியின் அவலம் குறித்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X