பொது செய்தி

தமிழ்நாடு

மேகமலையில் தொடர் மழை

Added : அக் 05, 2021
Share
Advertisement
கம்பம் : மேகமலையில் தொடர் சாரல் மழையால், சுருளி அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தென் மாவட்டங்களில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் சுருளி அருவியும் ஒன்றாகும். சின்னகுற்றலாம் என்று அழைக்கப்படும் இங்கு கோடைகாலம் தவிர மற்ற மாதங்களில் அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே

கம்பம் : மேகமலையில் தொடர் சாரல் மழையால், சுருளி அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தென் மாவட்டங்களில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் சுருளி அருவியும் ஒன்றாகும். சின்னகுற்றலாம் என்று அழைக்கப்படும் இங்கு கோடைகாலம் தவிர மற்ற மாதங்களில் அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். தினமும் சுற்றுலா பயணிகள் நுாற்றுக்கணக்கில் வந்து குளித்து செல்வர். சபரிமலை சீசனில் பக்தர்கள் கோயிலிற்கு சென்று விட்டு திரும்பும் போது, இங்கு வந்து அருவியில் குளித்து வீடு திரும்புவது வழக்கம்.

கொரோனாவால் 2 ஆண்டுகளாக அருவியில் குளிக்க அனுமதிஇல்லை. சில வாரங்களாக மேகமலை பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. அருவியில் குளிக்க அனுமதியில்லாததால் வெறிச்சோடியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X