பொது செய்தி

தமிழ்நாடு

சோத்துப்பாறை அணை நிரம்பியது

Added : அக் 05, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பியதால் வரகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்டசமாக 30 மி.மீ., மழை பெய்து அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டது. அணை மொத்த உயரம் 126.28 அடி. இரவு 11:00 மணிக்கு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. வினாடிக்கு 138 கனஅடி

பெரியகுளம் : பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பியதால் வரகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்டசமாக 30 மி.மீ., மழை பெய்து அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டது. அணை மொத்த உயரம் 126.28 அடி. இரவு 11:00 மணிக்கு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. வினாடிக்கு 138 கனஅடி நீர் வரத்து உள்ளது.

அணை நீரால் பெரியகுளம் , தாமரைக்குளம், பாப்பிபட்டி கண்மாய்கள், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் புரவு, பழயை, புதிய ஆயக்கட்டுகள் என 2865 ஏக்கர் பாசனவசதி பெறும். அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வராகநதியில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. பெரியகுளம் முதல் குள்ளப்புரம் வரை வராகநதி கரையோரம் வசிப்போர் கவனமாக இருக்க பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

* கும்பக்கரையில் காட்டாற்று வெள்ளம்: பெரிய குளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. நேற்று இரவில் கொடைக்கானல், கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X