சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் அருகே லாரி எரிந்ததால் பரபரப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் பங்க் அருகில் லாரி டயர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி பெட்ரோல் பங்க் அருகே நேற்று மாலை 5.00 மணியளவில் லாரி வந்தது. இதன் பின் பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை
 பெட்ரோல் பங்க் அருகே லாரி எரிந்ததால் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் பங்க் அருகில் லாரி டயர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி பெட்ரோல் பங்க் அருகே நேற்று மாலை 5.00 மணியளவில் லாரி வந்தது. இதன் பின் பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெட்ரோல் பங்க் அருகில் லாரி எரிந்ததால் அருகில் வசித்த மக்கள் அலறியடித்து ஓடினர். தீயை கட்டுப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எடைமணல் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சம்பத், 42; இவர் இரு தினங்களுக்கு முன் டி.என். 57 பி. 6786 எண்ணுள்ள லாரியில் பூம்புகாரில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு, கேரளாவில் இறக்கி விட்டு வந்தார். நேற்று மாலை மீண்டும் பூம்புகாருக்கு மீன் லோடு ஏற்றச் சென்ற போது தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X