பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துார் நீர்த்தேக்கம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஆத்துார் : சமீபத்திய மழையால், ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயரத் துவங்கிஉள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, ஆடலூர் பகுதிகளை நீர் பிடிப்பாக கொண்டு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.இங்கிருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி பேரூராட்சி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டம்

ஆத்துார் : சமீபத்திய மழையால், ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயரத் துவங்கிஉள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, ஆடலூர் பகுதிகளை நீர் பிடிப்பாக கொண்டு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.இங்கிருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி பேரூராட்சி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு டிசம்பரில் நீர்த்தேக்கம் நிரம்பியது. அதன் பின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய தண்ணீர் வரத்து இல்லை.இதனால் நீர்மட்டம் குறைந்து கடந்த ஜூலையில் 10 அடியாக (மொத்த உயரம் 24 அடி) இருந்தது. சில நாட்களாக பெய்யும் மழையால் வாய்க்கால்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து, நேற்று 17.2 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X