பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Added : அக் 05, 2021
Share
Advertisement
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று 7 பேருக்கு ரூ.2.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.இதற்கு முன் இக் கூட்டம் 2020 பிப்ரவரியில் நடந்தது. தேர்தல், கொரோனா பரவலால் ரத்தான நிலையில் 20 மாதத்துக்கு பிறகு நேற்று நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். உதவித்தொகை, அடையாள அட்டை, பட்டா, பட்டா

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று 7 பேருக்கு ரூ.2.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.

இதற்கு முன் இக் கூட்டம் 2020 பிப்ரவரியில் நடந்தது. தேர்தல், கொரோனா பரவலால் ரத்தான நிலையில் 20 மாதத்துக்கு பிறகு நேற்று நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். உதவித்தொகை, அடையாள அட்டை, பட்டா, பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம் கோருதல் என 475 மனுக்கள் வழங்கப்பட்டன. ரூ.2.03 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால், சக்கர நாற்காலி என 7 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.டி.ஆர்.ஓ., ரமேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X