பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பெயரில் இருக்கை சிந்தனைச்செல்வன் வலியுறுத்தல்

Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஆட்சி மன்ற குழு உறுப்பினராக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பல்கலைக்கு வந்த அவர் அளித்த பேட்டி:அண்ணாமலை பல்கலைக் கழகத்தை

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஆட்சி மன்ற குழு உறுப்பினராக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பல்கலைக்கு வந்த அவர் அளித்த பேட்டி:அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்று 9 ஆண்டுகளாகியும் பிரச்னைகள் தீராமல் நிர்வாக சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு பணி நிரந்தரம் செய்யாமல் உள்ள ஊழியர்களுக்கு, நியாயமான உரிமை, சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் நடந்த ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் தொகுப்பூதியர்களுக்கு 2 மாதம் மட்டுமே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்து பணி பாதுகாப்பை வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பணப்பயன்கள், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டும். பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் இருந்து மீள்வதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல்கலைக் கழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். புத்தம், சமணம் ஆகிய இந்திய மரபுகள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். தமிழ் வழியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பென்ஷன் தாரர்களுக்கு உடன் பணப் பயன்களை வழங்க வேண்டும். சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்கலைக்கழகம் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
05-அக்-202111:41:40 IST Report Abuse
Naagarazan Ramaswamy சிந்தனைச்செல்வன் அவர்கள் கல்வி அமைச்சரையும் முதல் அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளுக்கு வலு ஊட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். நேரில் பார்த்து சொன்னால் உடன் தீர்வு காண்பார்கள் என்பது உருதி. சிண்டிகேட் உறுப்பினர் ஏம் ஏல் ஏ செய்தால் நலம் பயக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X