பொது செய்தி

தமிழ்நாடு

பூமிதான நிலம் தனியாருக்கு தாரை வார்ப்பா.. வருவாய்துறை பேச்சு வார்த்தை

Added : அக் 05, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : நடகோட்டை ஊராட்சியில் பூமிதான நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது குறித்து பிரச்சினை எழுந்ததால் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.நடகோட்டை ஊராட்சியில் தனியார் நிறுவனம் சோலார் மின்சாரம் தயாரிக்க அப்பகுதி நிலங்களை சுத்தப்படுத்தினர். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்திய நிலத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் ஆக்கிரமிப்பு

நிலக்கோட்டை : நடகோட்டை ஊராட்சியில் பூமிதான நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது குறித்து பிரச்சினை எழுந்ததால் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

நடகோட்டை ஊராட்சியில் தனியார் நிறுவனம் சோலார் மின்சாரம் தயாரிக்க அப்பகுதி நிலங்களை சுத்தப்படுத்தினர். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்திய நிலத்தை தனியார் நிறுவன ஊழியர்கள் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டு கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்களுடன் தகராறு ஏற்பட்டு பிரச்னையானது. இதனையடுத்து விருவீடு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

பொதுமக்கள் தரப்பில், 1995க்கு பின் பூமிதான நிலம் தனியாருக்கு சட்டத்திற்குப் புறம்பாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும். பூமிதான பெயரில் இருந்த நிலம் தனியாருக்கு எப்படி மாறியது.சோலார் மின்சாரம் தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும். பூமிதான நிலம் கிராம அடிப்படை வசதிக்கு தேவையாக உள்ளதால் கிராமத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும்.

சோலார் மின்சாரம் தயாரிப்பில் கதிரியக்கம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதனை அனுமதிக்கக் கூடாது, என்றனர்.தற்சமயம் தனியார் நிறுவனத்தின் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். டி.எஸ்.பி., சுகுமாரன், இன்ஸ்பெக்டர்கள் குருவெங்கட்ராஜ், வனிதா, சங்கரேஸ்வரன் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X