பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி போட்டு செலவழிக்கும் வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக்கொண்டு செலவு செய்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்சிகளில், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதில் 453வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக்கொண்டு செலவு செய்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்சிகளில், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதில் 453வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 2,709 பதவிக்கு 8,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில்ஊராட்சி வாரியாக வெற்றி பெறும் கிராம வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, அந்தந்த ஊராட்சிக்கான துணைத் தலைவரை மறைமுகமாக தேர்வு செய்யலாம்.

அதன்படி, ஊராட்சி துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்து போட்டியிடும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தங்களை எதிர்த்துபோட்டியிடுபவர்களை தோற்கடிப்பதற்காக பூட்டு, கட்டில், சீப்பு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களையும், பணத்தையும் வாக்காளர்களுக்கு வாரி வழங்குகின்றனர்.மேலும், துணைத் தலைவர் பதவிக்காக நடைபெறும் மறைமுக வாக்களிப்பில், தனக்கு வாய்ப்புஅளிக்குமாறு, மற்ற கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுகின்றனர்.ஊராட்சி துணைத்தலைவர் பதவியை எதிர்பார்க்கும் வார்டு உறுப்பினர்கள், லட்சக் கணக்கில் பணத்தை செலவழித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X