பொது செய்தி

தமிழ்நாடு

குவாரி முறைகேடு வழக்கு: அமைச்சர், எம்.பி., ஆஜர்

Added : அக் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : சொத்துக்குவிப்பு மற்றும் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ல், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்
 குவாரி முறைகேடு வழக்கு: அமைச்சர், எம்.பி., ஆஜர்

விழுப்புரம் : சொத்துக்குவிப்பு மற்றும் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ல், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.நேற்று நடந்த வழக்கு விசாரணையில், அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு, ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.மற்றொரு வழக்குவானுார் தாலுகா, பூத்துறை செம்மண் குவாரியில் விதிமுறை மீறி, அரசுக்கு 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி மற்றும் கோதகுமார், ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தன், லோகநாதன், கோபிநாத் உள்ளிட்ட 8 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்ததால், வழக்கில் இருந்து நீக்கப்பட்டார்.நேற்று நடந்த வழக்கு விசாரணையில், அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 7 பேரும் காலை 11:00 மணிக்கு ஆஜராகினர்.இதையடுத்து, மதியம் 1:00 மணியளவில் வழக்கு விசாரணையை மீண்டும் மாலை 3:00 மணிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அப்போது, காலையில் இருந்து கோர்ட்டில் காத்திருந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும், வெளியில் சென்று மீண்டும் 3:00 மணியளவில் கோர்ட்டில் ஆஜராகினர்.இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X