பொது செய்தி

இந்தியா

பிலிப்பைன்சில் எம்.பி.பி.எஸ்., பயில லிம்ரா நிறுவனத்தில் சேர்க்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்வு எழுதாததவர்களும் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கலாம் என லிம்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.லிம்ரா நிறுவன உரிமையாளர் முகமதுகனி கூறியதாவது;இந்தாண்டு நீட் தேர்வு கடினமாக இருந்ததால் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைப்பதில் கடுமையான போட்டி இருக்கும். தமிழக அரசின் 26 மருத்துவக்

புதுச்சேரி : நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்வு எழுதாததவர்களும் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கலாம் என லிம்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிம்ரா நிறுவன உரிமையாளர் முகமதுகனி கூறியதாவது;இந்தாண்டு நீட் தேர்வு கடினமாக இருந்ததால் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைப்பதில் கடுமையான போட்டி இருக்கும். தமிழக அரசின் 26 மருத்துவக் கல்லுாரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ்., இடங்களை பெறுவதில் போட்டி இருக்கும்.கடந்த ஆண்டை விட அதிக எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைத்திருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு மதிப்பெண் 'கட்ஆப்' உயர்ந்து கொண்ட செல்கிறது. இதனால், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு எழுதாமல் இருந்தாலும் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.தமிழக மாணவர்கள் அதிகம் பயிலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 46 ஆண்டுகளாக இயங்கும் தவோ மருத்துவ கல்லுாரி, 61 ஆண்டுகளாக இயங்கும் ப்ரோகேஷன் மருத்துவ பல்கலைக்கழகத்தை பெற்றோர் அதிகம் தேர்வு செய்கின்றனர்.தவோ மருத்துவ கல்லுாரியில் பயில, கல்விக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ. 3.80 லட்சம், ப்ரோகேஷன் பல்கலையில் பயில ஆண்டிற்கு ரூ. 2.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது. விடுதி, உணவு செலவுகள் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம். ஆங்கில வழி கல்வி. கூடுதல் மொழி கற்க தேவையில்லை. சென்னையில் கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வரும் லிம்ரா நிறுவனம், இந்த இரண்டு மருத்துவக் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறது.அட்மிஷன், விசா, பயண ஏற்பாடு, விடுதி, இந்திய உணவு ஆகியவற்றை லிம்ரா செய்து தருகிறது. பிளஸ் 2 பாடத்தில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.இந்த பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை லிம்ராவில் நடந்து வருகிறது. முன்பதிவு செய்து கொள்ள, சென்னை மைலாப்பூர், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள லிம்ரா ஓவர்சீஸ் கல்வி நிறுவனம் மற்றும் 9952922333 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X