குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

Added : அக் 05, 2021
Share
கச்சிராயபாளையம் : அக்கராயபாளையத்தில் குடிநீர் கேட்டு, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வடக்கநந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கராயபாளையம் 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு
 குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

கச்சிராயபாளையம் : அக்கராயபாளையத்தில் குடிநீர் கேட்டு, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடக்கநந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கராயபாளையம் 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7:00 மணியளவில் அக்கராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கச்சிராயபாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் சமாதானம் கூறி முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்ததன் பேரில், 8:00 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X