தமிழ்நாடு

கட்டுப்படுத்தலாமே! தொடர்கிறது அங்கீகாரம் இல்லா பிளாட் விற்பனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் விற்பனை அதிகரிப்பதால், உள்ளாட்சிகளால் அடிப்படை வசதிகள் கூட செய்யமுடியாத இடத்தை வாங்கும் நடுத்தர மக்கள் வீடுகள் கட்டி அவதிப்படுகின்றனர்.மாவட்டத்தில் மழை அளவு குறைந்து வருவது விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் போவதால் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் தரிசாக போடப்படுகின்றன. சில ஆண்டுகள் கழித்து

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் விற்பனை அதிகரிப்பதால், உள்ளாட்சிகளால் அடிப்படை வசதிகள் கூட செய்யமுடியாத இடத்தை வாங்கும் நடுத்தர மக்கள் வீடுகள் கட்டி அவதிப்படுகின்றனர்.

மாவட்டத்தில் மழை அளவு குறைந்து வருவது விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் போவதால் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் தரிசாக போடப்படுகின்றன. சில ஆண்டுகள் கழித்து இவை பிளாட்களாக மாற்றி தரகர்கள் மூலம் நடுத்தர மக்களிடம் விற்கின்றனர். விற்பனை ஆகாத இடத்தில் இடத்தை விற்பனை செய்வதற்காக ஒன்று இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு விடுகின்றனர்.

இடைதரகர்களோ வீடுகள் கட்டி குடியேற பலர் இடம் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். இதை நம்பும் நடுத்தர மக்களிடம் அங்கீகாரம் இல்லாத மனையை விற்று விடுகின்றனர்.இப்படி வாங்கும் வீட்டு மனைகளில் ரோடு, தெரு விளக்கு, கழிவுநீர் செல்ல சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு என எந்த ஒரு அடிப்படை வசதியையும் இருப்பதில்லை. ஊராட்சி நிர்வாகத்தை அணுகி அடிப்படை வசதிகளை கேட்கும்போதுதான் அவை அங்கீகாரம் இல்லாத பிளாட்கள் என்பது தெரியவருகிறது.

மாதம் ,வார தவணையில் பணத்தை கட்டி வாங்கும் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கிய இடத்தில் வீடு கட்டினாலும் அதில் குடியேற முடியாத நிலை ஏற்படுகிறது. மழைக்காலத்தில் பாதை முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. தெரு விளக்கு வசதியும் இல்லாத நிலையில் இரவில் விஷப்பூச்சிகளும் படையெடுக்கின்றன. இதனால் மழைக்காலத்தில் சொந்த வீட்டை விட்டு சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கும் நிலை உள்ளது.


விழிப்புணர்வு தேவை


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ஹவுசிங்போர்டு திட்டத்தில் உருவாகும் நகர்களில் முறைப்படி ரோடு, சாக்கடை, குடிநீர் வசதி, பார்க் போன்றவற்றிற்கு இடம் ஒதுக்கப்படுகிறது . தனியார்கள் உள்ளாட்சிக்கு இடம் ஒதுக்காது விற்பதால் வாங்குவோர் அவதிப்படுகின்றனர். இடத்தை வாங்குபவர்கள் இது போன்ற வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும். விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே வீடு கட்டும் கனவு நனவாகும் . இல்லையேல் வேதனையில் வாழும் நிலைதான் ஏற்படும்.ரஜினி கருப்பசாமி, விவசாயி, சாத்துார்.........

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X