பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலையில் விவசாய பணி; ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருப்புத்துார்: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அளவிலான ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்தஆலோசனைக் கூட்டத்தில் நுாறு நாள் வேலைத்திட்டத்தில் விவசாயப் பணிகளை இணைக்க அரசை கோரியுள்ளனர்.அண்மையில் ஊராட்சிகளின் நிதி நிலைகள், கிராமசபை கூட்டங்களில் தீர்மானப் பொருட்கள் குறித்து இந்த கூட்டமைப்பினர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.அதில் விவசாயப் பணிகளுக்கு

திருப்புத்துார்: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அளவிலான ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்தஆலோசனைக் கூட்டத்தில் நுாறு நாள் வேலைத்திட்டத்தில் விவசாயப் பணிகளை இணைக்க அரசை கோரியுள்ளனர்.

அண்மையில் ஊராட்சிகளின் நிதி நிலைகள், கிராமசபை கூட்டங்களில் தீர்மானப் பொருட்கள் குறித்து இந்த கூட்டமைப்பினர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.அதில் விவசாயப் பணிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிப்பதாக ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனைடுத்துமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் விவசாய வேலைகளான நெல்நாற்று பறித்தல், நடவு, களை பறித்தல் மற்றும் தோட்டப்பயிர் சாகுபடிபணிகளை சேர்க்கவும், திட்டப்பணி ஆணைகளை ஊராட்சி தலைவர்கள் வழங்க கோரியும் தீர்மானித்தனர்.

மேலும்ஊராட்சித் தலைவர்களுக்கு காசோலை அதிகாரம், ஊராட்சி செயலர், நுாலகர்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்,துப்புரவு பணியாளர் நியமன அதிகாரம் வழங்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X