பொது செய்தி

தமிழ்நாடு

மகேந்திராவின் 'எக்ஸ்.யூ.வி.700' கார் சங்காலயா மோட்டார்சில் அறிமுகம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கடலுார் : மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான கடலுார் சங்காலயா மோட்டார்சில் 'எக்ஸ்.யூ.வி.700' புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டது.மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன கார்களின் கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட டீலராக சங்காலயா மோட்டார்ஸ் உள்ளது. கடலுார் சங்காலயா மோட்டார்ஸ் கிளையில் நேற்று
 மகேந்திராவின் 'எக்ஸ்.யூ.வி.700' கார் சங்காலயா மோட்டார்சில் அறிமுகம்

கடலுார் : மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான கடலுார் சங்காலயா மோட்டார்சில் 'எக்ஸ்.யூ.வி.700' புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன கார்களின் கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட டீலராக சங்காலயா மோட்டார்ஸ் உள்ளது. கடலுார் சங்காலயா மோட்டார்ஸ் கிளையில் நேற்று 'எக்ஸ்.யூ.வி.700' என்ற புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உரிமையாளர் துரைராஜ் தலைமை தாங்கினார்.ஏ.ஆர்.எல்.எம். பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜயோககுமார் அறிமுகம் செய்து வைத்தார்.பொதுமேலாளர்கள் காட்வின், கோவிந்தராஜ், கார்த்திக், சாகித், ரவிச்சந்திரன், ரவிக்குமார், மனித வள மேலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில்சுமங்கலி சில்க்ஸ் அன்சாரி, தேவி ஓட்டல் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய கார் பற்றி சங்காலயா மோட்டார்ஸ் உரிமையாளர் துரைராஜ் கூறுகையில், மகேந்திரா நிறுவனத்தில் 'எக்ஸ்.யூ.வி.700' புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விபத்தை தடுக்கும் வகையில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.7 பலுான்கள் உள்ளது. 360 டிகிரி கேமரா, 3டி சவுண்ட்ஸ், முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்திற்கேற்ப தானாகவே வேகம் குறையும்.கியரை மாற்றி போட்டால் வண்டி எந்த அசைவும் இல்லாமல் சீரான வேகத்தில் செல்லும் திறன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X