பொது செய்தி

தமிழ்நாடு

முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது வாக்காளர்களை கவனிப்பதில் வேட்பாளர்கள் 'பிசி'

Added : அக் 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு மட்டும் நாளை 6ம் தேதி முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.இப்பகுதியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு மட்டும் நாளை 6ம் தேதி முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.

இப்பகுதியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தனர்.அதேபோல் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னாள் அமைச்சர்கள் மோகன், விஜயபாஸ்கர், சம்பத் ஆகியோர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.மேலும், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனியாக கூட்டங்களைநடத்தி பிரசாரம் செய்தனர். மேலும் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி, பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.மாவட்டத்தில் நாளை 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதால், பிரசாரம் செய்வதற்கான நேரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இறுதி நாள் என்பதால், வேட்பாளர்கள் அனைவரும் பிரம்மாண்டமாக ஊர்வலம் நடத்தி தங்கள் பகுதி வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், வாக்காளர்களை கவனிக்கும் பணியில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதால், பரபரப்பான பிரசாரமின்றிஅமைதியான முறையில் முடிவடைந்தது. அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள பகுதிகள் மட்டும் பரபரப்பாக இருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X