பொது செய்தி

தமிழ்நாடு

பணி துவங்கி 16 மாதமாச்சு... எப்பதான் முடிப்பீங்களோ; அரைகுறை பணியால் ஸ்ரீவி., ரயில் பயணிகள் தவிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் உயர்த்துதல், நடைமேம்பாலம் அமைத்தல் பணி துவங்கி 16 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவடையாமல், தினமும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இங்கு பிளாட்பார்ம் தாழ்வாக இருந்ததால் பயணிகள் ரயிலில் ஏற இறங்க முடியாமல் தவித்து வந்தனர். சிலர் ஏறும் போது, இறங்கும்போது தவறி விழுந்து காயமடைந்து உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் உயர்த்துதல், நடைமேம்பாலம் அமைத்தல் பணி துவங்கி 16 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவடையாமல், தினமும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இங்கு பிளாட்பார்ம் தாழ்வாக இருந்ததால் பயணிகள் ரயிலில் ஏற இறங்க முடியாமல் தவித்து வந்தனர். சிலர் ஏறும் போது, இறங்கும்போது தவறி விழுந்து காயமடைந்து உள்ளனர். நடைமேம்பாலம் இல்லாததால் ரயில் பாதையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவசரத்தில் வரும் பயணிகள் தடுக்கி விழுந்தனர். இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்ல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபாவின் தொடர்வலியுறுத்தல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் தொடரப்பட்ட வழக்கு, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 2020 ஜூனில் பிளாட்பார்ம் உயர்த்தி கட்டும் பணி, நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.16 மாதங்கள் கடந்த நிலையில் முதலாம் பிளாட்பார்மில் மண்போட்டு சமப்படுத்தி இருப்பதால் மழை நேரத்தில் சகதியாகிறது. இரு பிளாட்பாரத்திலும் மேம்பாலத்திற்கான இரும்புத் துாண்கள் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக கொல்லம், பொதிகை, சிலம்பு,மதுரை -செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இயங்கி வரும் நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதில் பலர் ராஜபாளையம் சென்று இறங்கி மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்புகின்றனர். அரைகுறையாக முடங்கி கிடக்கும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் நலன் காக்க ரயில்வே உயரதிகாரிகளின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X