சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறை தீர்ப்பு கூட்டத்தில் 'வீடியோ' ரசித்த அதிகாரி

Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார் : கடலுார் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர், சமையல் குறிப்பு பார்க்கும் 'வீடியோ' இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பர். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறைகேட்பு கூட்டம் 7

கடலுார் : கடலுார் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர், சமையல் குறிப்பு பார்க்கும் 'வீடியோ' இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பர். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறைகேட்பு கூட்டம் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று கலெக்டரிடம் நேரடியாக மனுக்கள் வழங்கினர். துறை அதிகாரிகளை அழைத்து, நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.பிசியாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பெண் அதிகாரி ஒருவர், கூட்டம் நடப்பது பற்றி கண்டு கொள்ளாமல், தனது மொபைல் போனில் சமையல் செய்வது பற்றிய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். பெண் அதிகாரி, மொபைலில் மட்டுமே கவனம் செலுத்தியதை பார்த்த நபர் ஒருவர், அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan K -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202108:01:30 IST Report Abuse
Narayanan K கடலூர் மாவட்ட அதிகாரிகளின் யோக்கியதை இவ்வளவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X