போலீஸ் செய்திகள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
லாரி மீது மோதி பலிஅருப்புக்கோட்டை: ஆலடிபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முனியசாமி 53. நேற்று மதியம் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) திருச்சுழி ரோட்டில் வரும்போது ,தனியார் மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீதுமோதினார். தலையில் அடிபட்டு பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.நீரில் மூழ்கி மூதாட்டி பலிதிருச்சுழி: விருதுநகர் அருகே பேராளியை

லாரி மீது மோதி பலி

அருப்புக்கோட்டை: ஆலடிபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முனியசாமி 53. நேற்று மதியம் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) திருச்சுழி ரோட்டில் வரும்போது ,தனியார் மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீதுமோதினார். தலையில் அடிபட்டு பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

நீரில் மூழ்கி மூதாட்டி பலி

திருச்சுழி: விருதுநகர் அருகே பேராளியை சேர்ந்தவர் ராஜம்மாள் 80. நேற்று முன்தினம் திருச்சுழி அருகே மல்லம்பட்டியில் வசிக்கும் பேரன் ராஜபாண்டி வீட்டிற்கு வந்துள்ளார். இரவு திண்ணையில் துாங்கி உள்ளார். காலையில் பார்த்த போது கல்குவாரி கிடங்கில் நீரில் மூழ்கி இறந்து கிடந்த ராஜம்மாள் உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு தயாரித்த இருவர் கைது

சாத்துார்:வெம்பக்கோட்டை எஸ்.ஐ., வேலுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, வெற்றிலையூரணி அண்ணா காலனி பிச்சைக் கனி 53, வீட்டின் அருகில் சோல் சா வெடிகளை உரமூடையிலும், தமிழ் செல்வன் 57,வீட்டின் அருகில் 12 சோல் சரவெடியை உர மூடையில் வைத்திருந்தனர். இவர்கள் வீட்டில் பட்டாசு தயாரித்தது தெரிய வர ,வெடிகளை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

சத்திரப்பட்டி : வெம்பக்கோட்டை நயினாபுரம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி 28. 11 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதி முனீஸ்வரனை காதலித்து திருமணம் செய்தார். குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு தந்தை வீட்டில் இருந்துள்ளார். விவசாயத்திற்கு வைத்திருந்த எலி மருந்தை குடித்து இறந்தார். கீழராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுவால் தற்கொலை

ராஜபாளையம் : சங்கரன்கோவில் செந்தட்டியபுரம் சேர்ந்தவர் முனீஸ் குமர் 27. மனைவி சர்மிளா . 5 மாத குழந்தை உண்டு. குடும்பத்துடன் ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி., நகரில் வசித்து வந்தனர். முனீஸ் குமார் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் இருந்த முனீஸ்குமார் விஷம் குடித்து இறந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மது தர மறுத்தவருக்கு குத்து

சிவகாசி: முருகன் காலனியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி ஈஸ்வரன் 48. இவருக்கும் அம்மன் கோவில்பட்டியில் வசிக்கும் சாந்தகுமாருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் ஈஸ்வரன் புதுத்தெரு பகுதியில் சென்றபோது அங்கு வந்த சாந்தகுமார், சக்திவேல் ஆகியோர், மது வாங்கித்தர கூறினர். மறுத்ததால் மது பாட்டிலால் ஈஸ்வரனை குத்தினர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

குட்கா பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவில்புலிகுத்தி சங்கிலி கருப்பசாமி சொந்தமான வீட்டில் குட்கா பதுக்கியிருப்பதாக வந்த தகவலின் படி, பறக்கும் படை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் 70 மூடைகளில் இருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரனையில் இந்த பொருட்கள் முனீஸ்வரன் தெரிய வர வச்சக்காரபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X