பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகர் - திருச்சி ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை வழியாக இயக்கப்பட்ட விருதுநகர்-திருச்சி டெமோ ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஏராளமான ரயில்கள் தற்போது சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகிறது.ரயில் பயணிகள், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமுருகன் ஆகியோர் கூறுகையில், கொரோனா தொற்றிற்கு முன்பு விருதுநகரிலிருந்து காலை

மானாமதுரை : மானாமதுரை வழியாக இயக்கப்பட்ட விருதுநகர்-திருச்சி டெமோ ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஏராளமான ரயில்கள் தற்போது சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகிறது.ரயில் பயணிகள், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமுருகன் ஆகியோர் கூறுகையில், கொரோனா தொற்றிற்கு முன்பு விருதுநகரிலிருந்து காலை புறப்படும் இந்த ரயிலில் அருப்புகோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் காரைக்குடியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வந்தனர்.

ஏராளமான அரசு ஊழியர்களும் பயன் பெற்றனர்.தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து அனைத்து பகுதிகளுக்கும் ரயில்களை இயக்க ஆரம்பித்த நிலையில் மானாமதுரை வழியாக சென்ற இந்த ரயிலை மாணவர்கள் மற்றும் ரயில் பயணிகளின் நலன் கருதி மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X