மாவட்ட அறிவியல் இயக்க மாநாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அறிவியல் இயக்க மாநாடு

Added : அக் 05, 2021
Share
சிவகங்கை : காரைக்குடியில் அறிவியல் பார்வையில் கல்வி, சுகாதாரம், சூழலியல் என்ற தலைப்பில் அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு நடந்தது.மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கோபிநாத், கிளை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சேவற்கொடியோன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜூ, மாணவி தமிழ்செல்வி ஆகியோர் அறிவியல் விழிப்புணர்வு பாடல்

சிவகங்கை : காரைக்குடியில் அறிவியல் பார்வையில் கல்வி, சுகாதாரம், சூழலியல் என்ற தலைப்பில் அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு நடந்தது.

மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கோபிநாத், கிளை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சேவற்கொடியோன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜூ, மாணவி தமிழ்செல்வி ஆகியோர் அறிவியல் விழிப்புணர்வு பாடல் பாடினர். மாநில பொருளாளர் ஜீவானந்தம், செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினர்.

மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம் அறிக்கை வாசித்தார். மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேதுராமன், நேஷனல் கேட்டரிங் கல்லுாரி தாளாளர் சையது, பாபா கல்வி நிறுவன தாளாளர் பாபா அமீர் பாதுஷா, பேராசிரியர் குமரப்பன் வாழ்த்துரை வழங்கினர்.அறிவியல் இயக்க மாநில தலைவர் தினகரன் பேசும்போது கல்வியில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும்போது கற்றலில் உள்ள குறைபாட்டை மட்டும் பார்க்காமல், கற்பித்தலில் புதுமைகளை உருவாக்க வேண்டும், என்றார்.

மாவட்ட தலைவராக கோபிநாத், செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் ரகுநாதன், துணை தலைவர் சேவற்கொடியோன், பாபா அமீர் பாதுஷா, எட்வின், கிருஷ்ணவேணி, துணை செயலாளர் ராஜு, பிரபாகரன், ஆரோக்கியமேரி, பாலசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X